தூத்துக்குடி: திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் இன்று (03.07.2026) கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் இந்த தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




















