தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (26). கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துமணிகண்டன் (30). மற்றும் முகமது சதாலிபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி ஆனந்த் (31). ஆகிய 3 பேர்கள் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகள் மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 100/9514144100 என்ற அவசர உதவி எண்ணிலோ அல்லது Drug Free Tamil Nadu App மூலமாகவோ தெரிவிக்கலாம்.




















