திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக (DSP) செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கிய அவர், காவல் நிலையங்களின் நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டி.எஸ்.பி. செல்வகுமாரின் பொறுப்பேற்பைத் தொடர்ந்து, பழனி காவல் உட்கோட்டத்தில் காவல்துறை பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















