திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குட்டைகுளத்தை சேர்ந்த அலாவுதீன், சலீம், அப்பாஸ், சிக்கந்தர், பாபு ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார் ஜான்சன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணிப்பால்(44). சஞ்சீவ்வில்லியம்(21). கிஷோர்வசந்த்(21). சதீஷ் (எ)கிறிஸ்து பிரபாகரன்(33). ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கண்ட போது முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















