தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (67). என்பவர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது அவரிடமிருந்து 11 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, COTPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் 100 அல்லது 95141 44100 என்ற அவசர உதவி எண்களிலும், Drug Free Tamil Nadu செயலி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




















