திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையின் அவசர உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பெண் சிறப்புப் படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் லால்குடி பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.




















