திருச்சி: 80′ வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக இரத்ததான முகாம் (08/08/26) சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1:00 இனாம் குளத்தூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இனாம்குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் கோ.காமராஜ் அவர்கள் பங்கேற்று தானும் ரத்த தானம் வழங்கினார். இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! “ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















