திருச்சி: திருச்சி மாவட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட நடமாடும் தடயவியல் வாகனத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இவ்வாகனம் குற்றச் சம்பவங்கள் தொடர்பான தடயங்களைச் சேகரித்து, அறிவியல் பூர்வமான விசாரணைக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளது.




















