மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, (12.07.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




















