தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 90 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இ.கா.ப. சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கி பாராட்டினார். காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை பாராட்டும் வகையில் இந்த பாராட்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.




















