தேனி: பொதுச் சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் இயக்கி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்தியதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர் மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொதுச் சாலைகளில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




















