தேனி: தேனி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், நீண்ட காலமாக காவல்துறையில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வு பெறும் காவல்துறையினரின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், ஓய்வு பெறும் காவல்துறையினரின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்கள் காவல்துறைக்கு வழங்கிய அர்ப்பணிப்பான சேவை நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறும் காவல்துறையினரின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.




















