திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ஆயக்குடி 5வது வார்டை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் இருடியம் இருப்பதாக கூறி ரூ 19 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி செல்வகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூரில் பதுங்கி இருந்த சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லட்சம் பணம் 3 1/4பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















