திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (14). வயது சிறுமிக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்தது. இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் சிறுமி செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் வன்முறை செய்த குற்றச்சாட்டில் பூபாலகிருஷ்ணன், முகமதுபிலால், சேக்முஜிபுர் ரஹ்மான், ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தொடர்பில் இருந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சின்னாளபட்டியை சேர்ந்த நாகராஜ்(35). என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















