திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆன்லைன் மோசடிகள், சமூக வலைதள பாதுகாப்பு, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக கையாளுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் அவசர காலங்களில் அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.



















