கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R.ஸ்டாலின் IPS அவர்கள்* செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரணியல் பகுதியை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஸ்கிறீன்ஷோட் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை AI மூலமாக மார்பிங் செய்து, போலி Instagram ID- யில் பதிவேற்றம் செய்து, அப்பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க, கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பார்வதி, உதவி ஆய்வாளர் திரு.அஜ்மல் ஜெனிப் அவர்கள் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இக்குற்ற செயலில் ஈடுபட்டது கக்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரின் மகன் தனுஷ் (22). என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.




















