கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘நிமிர்’ திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாவட்டத் தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அமைந்துள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில், அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ‘நிமிர்’ குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



















