மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி S.வனிதா அவர்கள் தலைமையில் மதுரை மேல மாராட் வீதி, மீனாட்சி மஹாலில் சிற்றுந்து (மினி பஸ்) ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் மதுரை மாநகர போக்குவரத்து அதிகாரிகள், சிற்றுந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுடன் இணைத்து போக்குவரத்து விழிப்புணர்வு உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.
இதில் குறிப்பிட்ட உறுதிமொழியானது போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித விபத்துகளும் இல்லாதவாறு சிற்றுந்துகளை இயக்கி, காவல் துறையின் அறிவுரைகளை பின்பற்றி “விபத்தில்லாத மதுரை மாநகரை” உருவாக்க சிற்றுந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் சார்பாக என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















