மதுரை : மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 107வது பேட்ஜ் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 59 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான அடிப்படை கவாத்து பயிற்சி நிறைவு விழா (19.05.2026) நடைபெற்றது. ஆண் 43 பேர் மற்றும் பெண் 16 பேர் உட்பட மொத்தம் 59 பேருக்கு, மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த (11.03.2026) முதல் (18.05.2026) வரை அடிப்படை கவாத்து மற்றும் ஒழுங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சியின் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற ‘Passing Out Parade’ கவாத்து அணிவகுப்பு மரியாதையை மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) ஏற்றுக்கொண்டார். அப்போது, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் தங்கள் பணியில் ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு, காவல்துறைக்கு துணை நிற்க வேண்டும் என அவர் வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















