கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையின் மேற்கு பகுதியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களின் நடைபாதை இடிக்கப்பட்டதாகக் கூறி வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்து, பணியில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நிலைமை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி




















