கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாரப்பா என்பவரது நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி முள்ளு காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தபோது அங்கு சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து இரண்டு குற்றவாளிகளுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















