கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (05.07.2026) சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அப்பேருந்தில் பயணம் செய்த ஒரு நபரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் ₹40,45,500/- மதிப்பிலான போதை பொருள் இருந்தது. சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் ₹40,45,500/- மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















