கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, IPS அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியதம்பி, காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் தலைமை காவலர்கள் ரஞ்சித் குமார், காந்தி ஆகியோர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கெலமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு (34). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஜூபிடர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, IPS அவர்கள் பாராட்டினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















