திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி., இ.கா.ப., தலைமையில் (09.07.2026) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட காவல்துறையின் அனைத்து வாகனங்களும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், 32 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















