திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் காவல் சரகம் கல்மடம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஆன 5 பேரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில், உமேஷ்குமார் (23). சயித் சானி (31). மோகன்குமார் (20). தேவேந்திர சிங் (35), ஆகாஷ் குமார் (21). ஆகியோர் என்பதும், அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1.200 கிலோவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் மீது காவல் ஆய்வாளர், ரகுராஜன் வழக்குப் பதிந்தார். 5 பேரும் கைது செய்யப்பட்டதுடன், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















