திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்தில் கொலை மிரட்டல் வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ரோசன் ஞானசேகர் (24). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார் இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ரோசன் ஞானசேகரை, குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் (02.07.2026) அன்று அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில், நிகழாண்டில் இதுவரை 65 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















