திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (60). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தாழையூத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த மாரி மதன் (25). என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாரி மதன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் கொலைக் குற்றத்திற்காக, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், வழிப்பறி குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர்கள், சந்திரசேகரன் (தற்போது மதுரை மாவட்டம்) ஹென்றி அமலதாஸ், தலைமை காவலர், பாலசுப்பிரமணியன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 5 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 9 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















