திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் (02.07.2026) பிற்பகல் தனது மகன்களான ஜெயராஜ் (5). சின்னத்துரை (15). ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கல்லிடைக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோதுகாளிமுத்துவின் இருசக்கர வாகனம் மீது ஒரு கும்பல் காரை கொண்டு மோதியது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மூவரையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்ய முற்பட்டது. மூவரும் தப்பு முயற்சித்தும் அந்த கும்பல் விடாமல் காளிமுத்துவையும், அவரது 5 வயது இளைய மகன் ஜெயராஜையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. மட்டுமல்லாமல் காளிமுத்துவின் தலையை துண்டித்து மாநில நெடுஞ்சாலையில் நடுப்பகுதியில் வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் இருந்த காளிமுத்துவின் மூத்த மகன் சின்னத்துறையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் இரட்டை கொலை நடந்த சம்பவம் குறித்து அறிந்த திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர், முனைவர். ரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா சாஸ்திரி, இ.கா.ப., துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அத்துடன், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொளையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















