திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் “வீரா”, ஆறு மாத காலம் வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு (04.07.2026) அன்று மாவட்ட காவல்துறையில் முறைப்படி இணைக்கப்பட்டது. மோப்பநாய் படை பிரிவு காவலர்கள், மோப்பநாய் “வீராவை” திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி, இ.கா.ப., விடம் அறிமுகப்படுத்தி, அவருடைய வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டனர்.
போதைப்பொருளுக்கு எதிரான திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பணியில் இனி “வீரா”வும் களத்தில் இறங்கி கலக்கப்போவது உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















