சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின்பேரில், தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கண்ணன் ஆலோசனையின்படி, நகர் காவல் நிலைய போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கை உறுதி செய்தல், குற்றச்செயல்களைத் தடுப்பது மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்களை கண்காணிக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















