சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், சனிக்கிழமை (27.06.2026) இரவு காவல்துறை சார்பில் தீவிர Foot Patrol (நடை ரோந்து) மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களை மையமாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சமூக விரோத செயல்கள் மற்றும் இரவு நேர குற்றங்களைத் தடுக்க இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், பொதுமக்கள் அச்சமின்றி தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















