சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் தீவிர நடை ரோந்து (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நடை ரோந்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டதுடன், இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டன. குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















