திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், பட்டபிள்ளைபுதூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (19). மறுகால் குறிச்சி, ஆலடிபுதூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (20). மற்றும் களக்காடு, பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த மில்டன் போலாக் (19). ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால்
இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மூன்றடைப்பு காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மூவரும் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் (08.07.2026) அன்று அடைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில், நிகழாண்டில் இதுவரை 70 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















