தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல்துறையினரின் செயல் பொ துமக்கள் மத்தியில் காவல்துறை நண்பனாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.




















