விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், M. புதுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து, சம்பவ இடத்தில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். உரிய உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.




















