திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் புறநகர் ASP.மஞ்சிமா தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர். நவீன்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















