விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை இயக்கம் சார்பாக காந்தி ஜெயந்தி யை சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடை பெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தனசீலி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்று கள் நடும் திட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர் . தொடர்ந்து, மாணவர்களுக்கு இயற்கை வளங்களின் பயன்பாடு மற்றும் சுற்றுபுறச் சூழல் பாதுகாப்பு புவி வெப்ப மயமாகுவதை தடுத்தல் மரங்கள் வளர்ப் பதால் மழை அளவு அதிகரிப்பது பற்றிய விழிப்புனர்வு கருத்துகள் ஏற்படுத்தப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















