திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போக்சோ (POCSO) வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை, விசாரணை முன்னேற்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை மிகுந்த முக்கியத்துவத்துடன் கையாளவும், சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















