திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யாகலா நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துவிசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டியார்சத்திரம், K.புதுக்கோட்டையை சேர்ந்த பூமிபாலன்(39). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















