கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, மாரப்பா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள திறந்தவெளி முள்ளுக்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் தயாரித்து வைத்திருந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அங்கிருந்த சுமார் 25 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், அதை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். சட்டவிரோத சாராய உற்பத்தி தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















