தென்காசி: தமிழகத்திற்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் (08.07.26) அன்று காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவின் பேரிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அசோக் குமார் ஆலோசனையின் பேரிலும், ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் அறிவுறுத்தலின் பேரிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடையம், பாவூர்சத்திரம் விலக்குப் பகுதியில் கடையம் காவல் உதவி ஆய்வாளர், மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி முழுமையாக சோதனையிட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















