செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகர காவல்கள் மற்றும் தாலுக்கா காவலர்கள் குற்றவாளிகளை சிறப்பாக செயல்பட்டு அவர்களை பிடித்து சிறையில் அடித்தனர். இதனால் அந்தக் காவலர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு வெகுமதி செய்தனர். இதில் நற்பணிகள் செய்த காவலர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு நகர காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார். 5,17,832 ரூபாய் மதிப்புடைய 25,600 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்த போதைப் பொருட்கள் தடுப்பு படை காவலர்களுக்கும் மற்றும் காணாமல் போன இரு சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய தலைமைக் காவலர் ஸ்டாலின்., அவர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காசோலை வழங்கி பாராட்டினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்



















