செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை
வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும் வாருங்கள் தீபாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக கற்றுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை இத்துறை துவங்கி நடத்திவருகிறது. பொதுமக்களை அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீபாதுகாப்பு நடவடிக்களை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் .சீமா அகர்வால் இ.கா.ப அவர்களின் ஆணையின் படி இவ்விழிப்புணர்வு பயிற்சியானது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 11 தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்களில் (06.06.2026) மற்றும் (07.06.2026) ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது. இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு
பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு. மீட்புப்பணி துறை சார்பாக பொதுமக்கள் அனைவரும் வந்து தீயணைப்பு நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். இதில் சீ. லட்சுமி நாராயணன், தீயணைப்பு செங்கல்பட்டு
மாவட்ட அலுவலர், உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்



















