கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபராத்பள்ளியில் அமைந்துள்ள PM Quartz Surface Pvt. Ltd. நிறுவனத்தில், சுமார் 10 கிலோ எடையுள்ள ரூ.10,000 மதிப்பிலான காப்பர் ஒயர்களை திருட முயன்ற இருவரை சூளகிரி போலீசார் கைது செய்தனர். கடந்த (19.07.2026) அன்று காலை, நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் காப்பர் ஒயர்களை திருட முயன்றபோது, பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் உடனடியாக நிறுவன மேற்பார்வையாளர் விஜய்க்கு தகவல் அளித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் மடக்கிப் பிடித்து, சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், மேற்பார்வையாளர் விஜய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. J.ஆண்டனி பாபு




















