செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, படாளம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பாலூர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமார் 2500 கிலோ எடையுள்ள போதை வஸ்துக்களை நீதிமன்றத்தின் உத்தரவின் படி செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் டிஎஸ்பி ராஜா முன்னிலையில் தீ வைத்து அழிக்கும் பணி நடைபெற்றது இதில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் செங்கல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்



















