செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்(DCB ) மற்றும் பாலூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் வீதிகளில் காவல்துறையினருடன் இணைந்து நடைபயண ரோந்து (Foot Patrolling) மேற்கொண்டார். ரோந்துப் பணியின்போது, அப்பகுதியில் உள்ள வணிகர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் நடைபாதை சிறு வியாபாரிகளை நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள், போதை பொருள் மற்றும் குட்கா பொருள்களின் நடமாட்டம் குறித்தும் பிரச்சனைகள், பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அல்லது குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பிரத்தியேக தொலைபேசி எண் 7200102104 க்கு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடைபயண ரோந்துப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















