கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பைசால் (20). என்பவர் தற்போது திருப்பத்தூரில் தங்கி துணி வியாபாரம் செய்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (18.07.2026) தேதி மாலை சுமார் 04.00 மணிக்கு கல்லாவியில் இருந்து ஊத்தங்கரைக்கு அரசு பேருந்தில் வந்ததாகவும், அதே பேருந்தில் வந்த குற்றவாளி துணி வாங்க வேண்டும் என்று கூறி சின்ன கணக்கன்பட்டியில் இறங்க வைத்து, அந்த இடத்தில் ஏற்கனவே இருந்த இரண்டு குற்றவாளிகளும் துணி வாங்க வேண்டும் என்று கூறி அவரை குற்றவாளி ஒருவர் அவருடைய வாகனத்தில் அமர வைத்துக் கொண்டு கல்லாவி சாலையில் உள்ள ஊனாம் பாளையம், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டுள்ளன.
மீண்டும் ஊத்தங்கரை – கல்லாவி ரோடு, முத்துப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகில் வந்தபோது , அங்கு வந்த இரண்டு எதிரிகள் இவரிடம் வந்து சுடிதார் மெட்டீரியல்களை கேட்டதாகவும், இவர் தர மறுத்ததன் பேரில் இவரை தாக்கி இவரிடம் இருந்து சுடிதார் மெட்டீரியல்கள் மற்றும் பணம் சுமார் ரூபாய் ₹5000/- பறித்துக் கொண்டு மூன்று குற்றவாளிகளும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும், இது தொடர்பாக பைசால் என்பவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஊத்தங்கரை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி மூன்று எதிரிகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுடிதார் மெட்டீரியல்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மூன்று எதிரிகளையும் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. J.ஆண்டனி பாபு




















