திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.தெய்வம் அவர்கள் வழிகாட்டுதலின்படி (20.07.2026) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரேணுகா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், தலைமை காவலர் திரு.ஜெயக்குமார் மற்றும் காவலர் திரு.ஆனந்த் ஆகியோர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரயில் நிலையத்தில் இரயில் பயணிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு I930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















