திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறையில் தனியார் தங்கும் விடுதியில் ரேவ் பார்ட்டிக்காக போதை பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் திடீர் சோதனை மேற்கொண்டு தனியார் தங்கும் விடுதியில் இருந்து போதை ஸ்டாம்ப், மெத்தபட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விடுதியின் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விடுதியின் உரிமையாளர் கோவாவில் இருந்து வாங்கி வந்ததாக தகவல் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா




















