தென்காசி: தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூதாட்டியையும், அவருடைய பேரனையும் கொலை செய்த வழக்கில் மேக்கரையை சேர்ந்த முகமது காசிம் (23). என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரண தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபணம் ஆனதால் (29.06.2026) அன்று நீதிமன்றம் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர்கள், வேல்கனி,(தற்போது பாவூர்சத்திரம்) சங்கீதா அன்பு ஜூலியட், மற்றும் அச்சம் புதூர் காவல்துறையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S. அசோக் குமார், பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















